தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட், “கிரிக்கெட் போட்டிகளை நான் அதிகம் விரும்பி காண்பேன். ஆனால், விளையாடுவதற்கு நேரம் கிடைத்ததில்லை. சிறுவயதில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். கிரிக்கெட் போட்டியின் போது இரவில் அதன் ஹைலைட்ஸ் பார்ப்பேன்” என கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி, பும்ரா, அஸ்வின் ஆகியோர் தனக்கு பிடித்த வீரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள நீதியரசர் சந்திர சூட், முன்னாள் வீரர்களில் ராகுல் டிராவிட்டை மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.