இந்தியா

ஆதார் தகவல்களை கசிய விட்டால் சிறை: மத்திய அரசு எச்சரிக்கை

ஆதார் தகவல்களை கசிய விட்டால் சிறை: மத்திய அரசு எச்சரிக்கை

webteam

மாநில அரசுத் துறைகளின் வலைத்தளங்களில் ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் இடம் பெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இது தொடர்பாக தங்கள் வலைத்தளங்களை ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில அரசு வலைத்தளத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் ஆதார் எண்கள் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.