இந்தியா

ஊழல் புகார்: மேலும் 21 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளித்த மத்திய அரசு..!

webteam

மத்திய நிதியமைச்சகத்தில் மேலும் 21 அதிகாரிகளுக்கு, ஊழல் புகாரின்பேரில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சகத்தில் ஊழல் அதிகாரிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் மத்திய மறைமுக வரிகள், சுங்கத்துறையில் ஆணையர் அந்தஸ்த்தில் இருந்த 15 அதிகாரிகளுக்கு ஊழல் புகாரில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகு வருமான வரித்துறையில் 12 மூத்த அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 22 பேருக்கும் கடந்த செப்டம்பரில் 15 பேருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில், மும்பை, தானே, விசாகப்பட்டினம், ஹைதராபாத், ராஜமுந்திரி, ராஜ்கோட், ஜோத்பூர், போபால், இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றி வந்த மேலும் 21 அதிகாரிகளுக்கு ஊழல் புகாரில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி உத்தரவின்பேரில் இதுவரை 5 தவணையாக, 85 அதிகாரிகளுக்கு ஊழல் புகாரில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் சொத்துவிவரங்களை ஆண்டு தோறும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.