meta web
இந்தியா

சர்ச்சையில் இன்ஸ்டா | சிறார் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளை நீக்க மத்திய அரசு உத்தரவு!

சிறார் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளை உடனடியாக நீக்க இன்ஸ்டாகிராம் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் 7 நாட்களில் விளக்கம் தர மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PT WEB

சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகளை நீக்க இன்ஸ்டாகிராம் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய மின்னணுவியல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சிறார் பாலியல் காட்சிகள் இன்ஸ்டா பதிவுகளிலும் விளம்பரங்களிலும் அதிகளவு இடம்பெறுவதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. பயனாளர் பெயர் என்ற புதிய அம்சம் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், அதுகுறித்தும் அண்மையில் மெட்டாவிடம் அரசு விளக்கம் கேட்டிருந்தது. திரைப்படங்கள், ஓடிடி நிகழ்ச்சிகளை சட்டவிரோதமாக அனுமதிக்கும் விவகாரத்தில் மற்றொரு சமூக ஊடகமான டெலிகிராமிடம் அண்மையில் அரசு விளக்கம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.