இந்தியா

நான்காம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு?

EllusamyKarthik

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தியது மத்திய அரசு. 

தற்போது படிப்படியாக ஊரடங்கு நடைமுறைகளுக்கு தளர்வுகள் அமல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அரசு அறிவிக்க உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு தளர்விலிருந்து மெட்ரோ ரயில் சேவையை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் அதே நேரத்தில் கல்விக் கூடங்கள் மற்றும் திரையரங்குகள் என மக்கள் அதிகம் குழுமும் இடங்களில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மெட்ரோ ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாநில அரசுகளுடன் பேசிய பின்பே எடுக்கப்படும் எனவும் சொல்லபடுகிறது. 

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை வரும் செப்டம்பர் 1 முதல் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகயை சோதனை அடிப்படையில் தொடங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால்.