இந்தியா

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை

webteam

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
இதுதொடர்பாக மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்க மற்றும் வாங்க முடியும். இறைச்சிக்காக காளைகள், ஒட்டகங்கள், எருமைகள், பசுக்கள், இளம் காளைகள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றை விற்க முடியாது. இந்த விதிமுறைகள் அடுத்த 3 மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. மறைந்த முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, இறப்பதற்கு முன்பாகவே இந்த புதிய அறிவிப்பாணைக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறைச்சிக்காக மாடுகள் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாட்டு இறைச்சி கிடைக்காது. இதன் மூலம் மறைமுகமாக மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.