இந்தியா

விவசாயக் கடன் தள்ளுபடி பேஷனாகிவிட்டது - வெங்கையா நாயுடு விமர்சனம்

விவசாயக் கடன் தள்ளுபடி பேஷனாகிவிட்டது - வெங்கையா நாயுடு விமர்சனம்

webteam

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது பேஷனாகி விட்டது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மிக அரிதான சூழலில் மட்டுமே கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அதுவே விவசாயிகளின் பிரச்னைக்கு இறுதி தீர்வாகாது எனவும் கூறினார். மேலும், நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கர்நாடகா, உத்தரப் பிரதேச அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளன என்றும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தற்போது பேஷனாகி விட்டது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.