இந்தியா

காஷ்மீரில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதே இலக்கு - ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதே இலக்கு - ராஜ்நாத் சிங்

webteam

காஷ்மீரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதில் அரசு உறுதி கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் தொடர்பாக ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், எல்லையில் சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு இந்தியப் படையினர் பதிலடி அளித்து வருவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே டெல்லியில் பேசிய வெளியுறவுத் துறை அதிகாரி ரவீஷ் குமார், இந்த ஆண்டில் இதுவரை ஆயிரம் முறை பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதிகளை இந்தியப் பகுதிக்குள் ஊருடுவச் செய்து அவர்களை தங்கள் கவசமாக பாகிஸ்தான் படையினர் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.