BIS இல்லாத ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. BIS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரம் குறைந்த தலைக்கவசங்கள் விற்பனையை தடுக்க கடைகள்தோறும் ஆய்வு நடத்த மாநில அரசுகளையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
BIS தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களே பாதுகாப்பானவை என்றும் அவற்றை மட்டுமே வாங்கவேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடெங்கும் நடைபெற்று வரும் சோதனைகளில் BIS சான்று இல்லாத ஏராளமான தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.