2ஜி முறைகேடு வழக்கு
2ஜி முறைகேடு வழக்கு முகநூல்
இந்தியா

2ஜி முறைகேடு வழக்கு | தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி மத்திய அரசு மனு!

PT WEB

கடந்த 2012ஆம் ஆண்டு 2ஜி முறைகேடு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றைகளை ஒதுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மேலும் ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களையும் உச்ச நீதிமன்றம் அப்போது ரத்து செய்திருந்தது.

டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை

இந்த சூழலில் ‘ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றை விற்க வேண்டும்’ என்ற உத்தரவில் மத்திய அரசு திருத்தம் கோரியுள்ளது. “சட்டத்தின் அடிப்படையில் நிர்வாக நடைமுறைகள் மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்கவேண்டும் ”என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நோக்கில் மட்டுமல்லாமல் தேசப்பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக 2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. அவ்வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.