இந்தியா

ஏப்ரல் 14 வரை சுங்கக் கட்டணம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

ஏப்ரல் 14 வரை சுங்கக் கட்டணம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

webteam

நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதான நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இரண்டு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் இடையேயான அத்தியாவசிய போக்குவரத்து தவிர மற்றவை முடக்கப்பட்டுள்ளன. இந்த அவசர நிலையில், அனைத்து சுங்கக் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை சுங்கக் கட்டணங்களை ரத்து செய்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டுள்ளது.