இந்தியா

நெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி

நெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி

jagadeesh

மறுசுழற்சி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கழிவு நெகிழிப் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

கடந்த‌ ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழகம், உ‌த்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 99 ஆயிரத்து 545 மெட்ரிக் டன் நெகிழி கழிவுகள் மறுசுழற்சிக்காக இறக்குமதி செய்யப்பட்டன. அனைத்து நெகிழிகளும் மறுசுழற்சி செய்யப்பட்டு துண்டுகள் அல்லது கட்டிகளாக மீண்டும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. 

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும் எந்த சந்தடியும் இல்லாமல் நெகிழிகள் இறக்குமதியாகி வந்தது. இதை பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஸ்மிருதி மன்ச் என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் வெளியிட்டது. இதனிடையே நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கழிவு நெகிழிப் பொருட்களை இறக்குமதி செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது. குறிப்பாக PET எனப்படும் பாலியெத்திலீன் டெரெப்தாலேட் வகை நெகிழிகள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மறுசுழற்சி நிறுவனங்களில் பணியாற்றி வரும் 40 லட்சம் பேர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.