எந்த வைரஸாலும் ஆதார் தகவல்களை அசைக்க முடியாது என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ரேன்சம்வேர், வான்னா கிரை எனப்படும் வைரஸ் தாக்குதல், உலக நாடுகளின் இணைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் மூலம் 114 கோடி இந்திய குடிமக்களின் ஆதார் தகவல்களை எளிதில் தாக்கி திருடிவிட முடியும் என்று அஞ்சப்பட்ட நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைவர் ஜே. சத்யநாராயணா, ஆதார் தகவல்கள் என்கிரிப்ட் எனப்படும் குறியாக்க அடிப்படையிலான வடிவமைப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே இதில் பாதுகாப்புக் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு, ஆதார் ஒழுங்கமைப்பில் ரூ.7000 கோடி செலவழித்திருப்பதாகவும், மோசடியாக பயன்படுத்தப்பட்ட அரசின் நலத்திட்டங்களைக் களையெடுத்ததன் மூலமாக, ரூ.50,000 கோடி வரை அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.