இந்தியா

"பண்டிகைகளின்போது கொரோனா பரவும் அபாயம்" - எச்சரிக்கும் மத்திய அரசு

"பண்டிகைகளின்போது கொரோனா பரவும் அபாயம்" - எச்சரிக்கும் மத்திய அரசு

PT WEB

வரவிருக்கும் பண்டிகைக்காலத்தின்போது மக்கள் அதிகளவில் ஓரிடத்தில் கூடுவதால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

ஓணம், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்த சில மாதங்களில் வர உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இப்பண்டிகைகள் காரணமாக மக்கள் ஓரிடத்தில் திரள்வார்கள் என்பதால் தொற்று வேகமாக பரவும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, இதை தடுக்க உள்ளூர் அளவில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொற்று உள்ளோரிடம் தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது, தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொய்வில்லாமல் மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று மீண்டும் 40 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது