இந்தியா

ஆப்கனில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசின் துரித நடவடிக்கை தேவை: காங்கிரஸ்

ஆப்கனில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசின் துரித நடவடிக்கை தேவை: காங்கிரஸ்

Veeramani

ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய பாஜக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அங்குள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் போன்றவர்களின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.

எனவே ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் கைவிடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் பிரதமரும், வெளியுறுவுத்துறை அமைச்சரும் அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்கான தெளிவான திட்டத்தை தெரிவிக்குமாறும் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தியுள்ளார்.