இந்தியா

தேசிய நதிநீர் இணைப்புக்கு குழு அமைத்தது மத்திய அரசு

தேசிய நதிநீர் இணைப்புக்கு குழு அமைத்தது மத்திய அரசு

Rasus

தேசிய நதிநீர் இணைப்புக்காக நீ‌ர்வள அமைச்சகத்தின் தலைமை ஆலோசகர் நவலவாலா தலைமையில் மத்தி‌ய அரசு குழு அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தக் கோ‌ரி ராதாகிருஷ்ணன் என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்‌நிலையில் அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள தேசிய நீர் மேம்பாட்டு முகமை, நதிநீர் இணைப்புக்காக‌ நீர்வள ‌அமைச்சகத்தின் தலைமை ஆலோசகர் நவலவாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நதிநீர் இணைப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாகவும், ‌இதுவரை இக்குழு 13 முறை ஒன்று கூடி நதிநீர் இணைப்பு தொடர்பாக விவாதித்திருப்பதாகவும் அந்த பதில் கடிதத்தில் சுட்டிக் காட்ட‌ப்பட்டுள்ளது.