இந்தியா

வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தம் : விவரம் கேட்ட மத்திய அரசு

வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தம் : விவரம் கேட்ட மத்திய அரசு

webteam

வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டை வாங்கியுள்ள நிலையில் இது தொடர்பான ஒப்பந்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. 

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை மத்திய நிதியமைச்சகத்தின்
வரிப் பிரிவு ஆராய உள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் உள்ள வரி செலுத்துவதை தவிர்க்கும் அம்சங்கள் குறித்தும் நிதியமைச்சகத்தின்
வரிப்பிரிவு ஆராய உள்ளது. 

ஃப்ளிப்கார்ட்டை சுமார் 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு உள்நாட்டு சில்லறை
விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து
மத்திய அரசு ஆய்வு செய்யவுள்ளது.