மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டதை எதிர்த்து, குடியரசு தலைவர் பரிந்துரை அனுப்ப மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
அரசமைப்பு விதி 143இன் படி உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் பரிந்துரை அனுப்புவது குறித்து, மத்திய உள்துறை, சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
குடியரசு தலைவர் பரிந்துரை அனுப்பப்பட்டால், அதனை ஆராய்ந்து உச்ச நீதிமன்றம் தனது கருத்தினை தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதனை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும் என்பதால், குடியரசு தலைவர் பரிந்துரை அனுப்ப மத்திய அரசு ஆலோசித்து வருவதாக சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதற்காகவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து சாதகமாக இல்லாவிட்டால், காலக்கெடு நிர்ணயம் செய்வதை எதிர்த்து அவசர சட்டம் கொண்டு வருவதற்கும், ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டது.