இந்தியா

மின்னணு முறையில் பணம் செலுத்தினால் வரிக்கழிவு

மின்னணு முறையில் பணம் செலுத்தினால் வரிக்கழிவு

webteam

பொருட்கள் வாங்கும் போது மின்னணு முறையில் பணம் செலுத்தினால் வரிக் கழிவு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அதன் பின்னர், தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து முடிவு செய்யபட்டு வருகின்றனர். ஒரு வருடத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் 300க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தினைக் குறைத்துள்ளது. இந்நிலையில், தலைநகர் புதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொருட்கள் வாங்கும் போது மின்னணு முறையில் பணம் செலுத்தினால் வரிக் கழிவு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ருபே கார்டு மற்றும் பீம் செயலி, யுஎஸ்எஸ்டி மூலம் பணம் செலுத்தினால் 20 சதவிகித வரிக்கழிவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் கழிவு அதிகபட்சம் 100 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்றும் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது.