இந்தியா

இந்திய விமான படைக்கு 48000 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்கும் மத்திய அரசு

EllusamyKarthik

இந்திய விமான படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை சுமார் 48000 கோடிரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாம். அதிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த விமானங்கள் டெலிவரியாகும் எனவும் தெரிகிறது. 

“சுயசார்பு இந்தியா திட்டத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தின் வெளிப்பாடு இது” என தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

இந்த போர் விமானங்கள் அனைத்தும் மார்க் 1A ரக விமானங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள இலக்குகளை அடைவது, ஆகாயத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்வது, எதிரிகளின் ரேடாரை முடக்குவது மாதிரியானவசதிகள் இதில் உள்ளன. தொடர்ந்து மார்க் 2 ரக விமானங்களை வாங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.