இந்தியா

நாசிவழி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு! அதன் முக்கிய அம்சங்கள்!

Sinekadhara

சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. பெரியவர்கள் இதனை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ளலாம்.

நாசி வழி தடுப்பூசியின் முக்கிய அம்சங்கள்:

1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு சொட்டு நாசி தடுப்பூசி, iNCOVACC, இன்று மாலை Co-WIN தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது தனியார் மையங்களில் மட்டுமே கிடைக்கும்.

3. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களும் மூக்கு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம்.

4. இந்த தடுப்பூசிக்கு பன்முகத்தன்மை உள்ளதால், முதல் டோஸ் தொடரில் வேறு தடுப்பூசியை செலுத்தி இருந்தாலும், பூஸ்டர் தடுப்பூசியாக இதனை செலுத்தமுடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

5. ஊசி இல்லாத இந்த மூக்குவழி தடுப்பூசியானது அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக நவம்பர் மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலைப் பெற்றது.