இந்தியா

ஒமைக்ரான் தடுப்பு - தமிழகம் வருகிறது மத்தியக் குழு

கலிலுல்லா

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி உள்ள நிலையில் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன் ஒருகட்டமாக ஒமைக்ரான் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய மத்தியக்குழு தமிழகம் வர உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி, பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், மிசோரம் மாநிலங்களுக்கும் மத்தியக்குழு விரைகிறது.

அதிக ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் குறைவான தடுப்பூசி விகிதமுள்ள 10 மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசிப் பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை மத்தியக்குழு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.