இந்தியா

மதுராவில் குரங்குகள் காப்பகத்துக்கு 25 ஏக்கர் நிலம்

jagadeesh

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு காப்பகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மதுராவில் உள்ள சாலைகள் மற்றும் கோயில் வளாகங்களில் குரங்குகள் பெருமளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுவதால் குரங்குகளுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என மதுரா தொகுதி எம்பியான ஹேமா மாலினி வாக்குறுதி அளித்திருந்தார். 

இந்த நிலையில் 25 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வனத்துறையின் உதவியுடன் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து, காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.