இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எப்போது துவங்கும்? - மத்திய அரசு விளக்கம்

PT

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வைத்துள்ள திட்டம் குறித்து மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு, 2019-ம் ஆண்டு மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது.

ஆனால் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக 2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மக்கள் தொகை கணக்குப் பணிகளை மறு உத்தரவு வரும் வரை தொடங்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு, இப்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2019-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக அத்தகைய பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.