அயோத்தி செல்லும் பிரபலங்கள்
அயோத்தி செல்லும் பிரபலங்கள் pt web
இந்தியா

கொண்டாட்டத்தில் அயோத்தி; கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? யார்?

Angeshwar G

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுவருகிறது. இதற்கான கும்பாபிசேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், மடாதிபதிகள், திரைநட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என சுமார் 8 ஆயிரம் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பிதழ் தரப்பட்டிருந்தாலும், அவர் நிகழ்வில் பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஸ்டை விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பங்கேற்கின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷய்குமார், ராம்சரண், கங்கனா ரணாவத், அல்லு அர்ஜுன் மற்றும் மாதுரி தீட்சித் பங்கேற்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்தி சென்றார்.

இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அவர், “500 ஆண்டுகளாக நடந்துவந்த பிரச்னை அது. அதற்கு தீர்வு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றமே தீர்வினை கொடுத்துள்ளது. அதை இப்போது நிறைவேற்றி உள்ளார்கள். இந்த நாள் வரலாற்றிலேயே மறக்கமுடியாத மிக முக்கியமான நாள்” என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ஆனந்த் மகேந்திரா, ரத்தன் டாடா, கவுதம் அதானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏராளமான முக்கியஸ்தர்கள் பங்கேற்பதால் அயோத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.