gyanesh kumar ANI
இந்தியா

இரண்டு முறை Statefirst.. உ.பி. முதல் US வரை.. ஞானேஷ் குமாரின் முடிவில்லாத கல்விப் பயணம்!

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, இந்தியாவின் புகழ்பெற்ற கான்பூர் ஐ.ஐ.டியில் சிவில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

Prakash J

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் நிலையில், அவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே அவருடைய கல்விப் பயணம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR)மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களர் அட்டைகளைப் பெற்றிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் எனப் பல வாக்களர்கள் நீக்கப்பட்டனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு, இரண்டு தேர்தல் ஆணையர்களே எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.

gyanesh kumar

இதனால், நாடு முழுவதும் போராட்டமும் வெடித்துள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ள போதிலும் அவரைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியேறி வருகின்றன. அந்த வகையில், ஆரம்பக் காலம் முதலே கல்வியில் சிறந்து விளங்கியவராக ஞானேஷ் குமார் அறியப்படுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்த இவர், அம்மாநிலப் பள்ளி வாரியத் தேர்வில் மாநில அளவில் இரண்டு முறை முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

அவர் 1979-இல் உயர்நிலைப் பள்ளியிலும், 1981-இல் இடைநிலைப் பள்ளியிலும், உத்தரப் பிரதேச வாரியம் நடத்திய தேர்வுகளில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, இந்தியாவின் புகழ்பெற்ற கான்பூர் ஐ.ஐ.டியில் சிவில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, இந்திய சாசன நிதி ஆய்வாளர்கள் கழகத்தில் வணிக நிதியியல் பயின்றுள்ளார்.

gyanesh kumar

மேலும், அமெரிக்காவின் உலகின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புறச்சூழல் பொருளாதாரத்தில் உயர் கல்வியையும் முடித்துள்ளார். 1988-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கிய ஞானேஷ் குமார், 2024 மார்ச்சில் இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு, பின்னர் பிப்ரவரி 2025-இல் இந்தியாவின் 26-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். உபியின் பள்ளி வகுப்பறைகள் முதல் தேர்தல் ஆணைய இருக்கை வரை, ஞானேஷ் குமாரின் பயணத்தில் கல்வி முக்கியமானதாக இருந்துள்ளது.