இந்தியா

மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு - சி.பி.எஸ்.இ

மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு - சி.பி.எஸ்.இ

webteam

பள்ளியில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை பள்ளிகளே உறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குர்கானில் 7 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு பின்பு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள கார்கர் பள்ளியில் இதே 8 வயது மாணவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா். தொடர்ந்து சில நாட்களில் 4 வயது சிறுமி பள்ளி வாட்ச்மேனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

இந்நிலையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அதற்கான புதிய வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள், போலீஸ் சரிபார்ப்பு, மனோதத்துவ மதிப்பீடு, பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் குழுக்களின் அரசியலமைப்பு, மாணவர்களின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் பெற்றோரிடமிருந்து வழக்கமான கருத்துக்களை எடுத்துக் கொள்வது ஆகியவை குழு பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகளில் உள்ளன. அதாவது, பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தல், போலீஸ் மூலம் அடிக்கடி விசாரணை மேற்கொள்ளுதல், மாணவர்களின் உளவியல் செயல்பாடு ஆய்வு, பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் குழுக்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

மேலும், பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, மற்றும் அவர்கள் உடல் அல்லது உணர்ச்சிபூர்வமாக துஷ்பிரயோகமோ அல்லது துன்புறுத்தலோ செய்யப்படாமல் பாதுகாப்பது குறித்து பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.