இந்தியா

நீரிழிவு நோய் பாதித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி

webteam

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது நொறுக்குத் தீனி உட்கொள்ள சிபிஎஸ்இ அனுமதி வழங்கியுள்ளது.

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டைப் 1 நீரிழிவு பிரச்னை உள்ள 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்சி தேர்வு எழுதும் போது இடையில் நொறுக்குத் தீனி எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற டைப் 1 நீரிழிவு பிரச்னை உள்ள மாணவர்கள் அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. மேலும், அவர்களுடைய ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை முறையாக வைத்துக்கொள்வதும் அவசியமாகும். இந்த மாணவர்கள் அடிக்கடி உணவு உண்பது அவசியத் தேவை என்பதால், இந்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் சுகர் மாத்திரைகள், பழங்கள், நொறுக்குத் தீனி, குடிநீர் ஆகியவற்றை தேர்வறைக்கு எடுத்து வர அனுமதிக்கப்படுவார்கள். அவற்றைத், தேர்வறைக் கண்காணிப்பாளர்களிடம் கொடுத்து வைத்து தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், மாணவர்களின் உடல் நிலை குறித்த மருத்துவச் சான்றிதழை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், முன்னதாகவே அனுப்ப வேண்டும் என்று சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.