இந்தியா

சுவர் ஏறி குதிக்கும் சிபிஐ பாணி - 'அன்று தயாநிதிமாறன்'.. 'இன்று ப.சிதம்பரம்' 

சுவர் ஏறி குதிக்கும் சிபிஐ பாணி - 'அன்று தயாநிதிமாறன்'.. 'இன்று ப.சிதம்பரம்' 

rajakannan

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லியில் உள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் கதவு திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். நேற்று முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று கைது செய்வது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்பு பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறனை அவரது சென்னை போட் கிளப் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முயன்றனர்.

2010ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே சூழல் தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது. தற்போது, அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ள போது, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.