இந்தியா

ப.சிதம்பரத்துக்கு தொடர்பான இடங்களில் திடீர் சிபிஐ சோதனை.... காரணம் என்ன?

ப.சிதம்பரத்துக்கு தொடர்பான இடங்களில் திடீர் சிபிஐ சோதனை.... காரணம் என்ன?

நிவேதா ஜெகராஜா

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ப.சிதம்பரம் வீட்டில் மட்டுமன்றி காங்கிரஸ் எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்த உள்ளது. டெல்லியிலுள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் ரெய்டு நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா வெளிநாட்டிலிருந்து பணம் பெற உதவியதாக சிபிஐ-ல் ஏற்கெனவே வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம், `எத்தனை முறை இதுவரை சோதனை நடந்துள்ளது என்பதை நானே மறந்துவிட்டேன். எத்தனை முறைதான் இதுவரை சோதனை நடந்துள்ளது? இதை குறித்துவைக்க வேண்டும்’ என ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.