இந்தியா

லாலு பிரசாத் மீது சிபிஐ புது வழக்கு: வீடுகளில் திடீர் ரெய்டு

லாலு பிரசாத் மீது சிபிஐ புது வழக்கு: வீடுகளில் திடீர் ரெய்டு

webteam

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக, சி.பி.ஐ.
புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. 

2006-ல் ரயில்வே அமைச்சரா‌க லாலு இருந்த போது, குர்கான், புரி நகரங்களில் ஹோட்டலுக்கு டெண்டர் விட்டதில்
முறைகேடு நடைபெற்றதாக கூறி, இந்த வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. அவருடன் அவர் மனைவி ராப்ரிதேவி,
மகன் தேஜஸ்வி, இந்திய ரயில்வேயின் முன்னாள் எம்.டி. பிகே.கோயல், லாலுவின் நெருங்கியவரான பிரேம் சந்த்
குப்தாவின் மனைவி சர்லா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, லாலு பிரசாத்துக்கு சொந்தமாக டெல்லி, பாட்னா, குர்கான், புரி உள்பட 12 இடங்களில் உள்ள வீடு,
அலுவலங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகிறது.