இந்தியா

நீட்டிக்கப்படுமா சிதம்பரத்தின் சிபிஐ காவல்? 

நீட்டிக்கப்படுமா சிதம்பரத்தின் சிபிஐ காவல்? 

webteam

சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் காவல் நீட்டிக்கக்கோரி சிபிஐ அனுமதி கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைதாகினார். அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் மீண்டும் காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் “ஒரு மனிதனை இல்லாமல் ஆக்குவதற்காக கைது செய்கிறார்கள். ஒருவர் கைது செய்யப்படும் முன் அவர் குற்றவாளியா என விசாரணை அமைப்புகள் ஆராய வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே விசாரணை அமைப்புகள் மூடி மறைத்தே வேலை செய்கிறது” என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி வருகிறார்.