இந்தியா

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு: ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

webteam

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்து டெல்லியில் 20 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களிலும் அப்போது ஒரே நேரத்தில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை தொடங்க அடிப்படையாக அமைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கையில் 5 கோடியே 53 லட்ச ரூபாய்க்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.