இந்தியா

லுக்அவுட் நோட்டீஸ் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு

webteam

கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை எதிர்த்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று உடனடியாக விசாரணைக்கு வருகின்றன.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதவாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பின. இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆனால், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் இன்று உடனடியாக விசாரணைக்கு வருகின்றன.