காவிரி நீரை மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், காவிரி நீரை பாசனத்திற்கு தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்திருந்தது. இந்நிலையில் காவிரி நீரை, குட்டியாடி நீர் மின் திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் காவிரி நீரை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்ற உச்சநீதிமன்றம் உத்தரவால் ரூ.1,800 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.