இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவு

webteam

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை கர்நாடக திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கான காவிரி நீரை பிரிப்பதற்காக ஒரு அமைப்பை (ஸ்கீம்) மத்திய அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஸ்கீம் என்ற வார்த்தை சர்ச்சையையும், விவாதங்களையும் ஏற்படுத்த, பின்னர் ஸ்கீம் என்பது ஆணையம் அல்லது அமைப்பு என்பதுபோன்ற பொருள்படும் என்றும், அந்த ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி காவிரி நதிநீர் பங்கீட்டிற்காக ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்கப்படும் என்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆணையம் அமைக்கப்பட்டு அதற்கு மசூத் ஹூசைன் தலைவராகவும், ஏ.எஸ்.கோயல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. 

இதில் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஏ.எஸ்.கோயல், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன்குமார் உள்ளிட்ட மத்திய அதிகாரிகள் பங்கேற்றனர். அத்துடன் 4 மாநிலத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில், ஜூலை மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்கப்பட வேண்டிய அளவு டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.