இந்தியா

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

webteam

காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை 1.72 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின்போது, பிறப்பித்த உத்தரவையும் கர்நாடகா இதுவரை பின்பற்றவில்லை. 

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் இந்தக் கூட்டம் நடைபெறும். ஏற்கெனவே உத்தரவிட்டப்படி தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது. 

மேலும் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கு எடுத்து வரும் முயற்சிகள்‌ குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என தெரிகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.