இந்தியா

காவிரி விவகாரம்: கேரள அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

காவிரி விவகாரம்: கேரள அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

Rasus

காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதித் தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீட்டை உச்சநீதிமன்றம் அறிவித்து இருந்தது. அதன்படி கர்நாடகத்திற்கு 284.75 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரும், கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் ஒதுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில் காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிராக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. கேரளாவின் குடிநீர் தேவைக்காக கூடுதலாக 5 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கேரளா அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தீர்ப்பில் தலையிடுவதற்கான எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.