இந்தியா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

webteam

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளன. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிடும் முன்பே மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அங்கு பல இடங்களில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அத்துடன் அங்கு சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளன. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, தேசிய மாநாட்டு கட்சி எம்பி முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இது தவிர காஷ்மீரில் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க உத்தரவிடக் கோரிய மனுவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரிக்க உள்ளனர்.