இந்தியா

ஹிந்தி மொழியை அவமதித்ததாக ராஜ் தாக்கரே மீது வழக்கு

Rasus

ஹிந்தி மொழியை அவமதிக்கும் வகையில் பேசியதாக ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சியின் தலைவராக இருப்பவர் ராஜ் தாக்கரே. இவர் ஹிந்தி மொழியை அவமதிக்கும் வகையில் பேசியதாக சமூக ஆர்வலரான தமன்னா ஹஷ்மி என்பவர் முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். புகார் மனுவில், ஹந்தி தேசிய மொழி இல்லை என்று தாக்கரே பேசியதாகவும், இததவிரவும் ஹிந்தி மொழியை மிகவும் அவமதிக்கத்தக்க வகையில் ராஜ் தாக்கரே பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான காட்சிகள் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாக்கரேவின் பேச்சுகள் தன்னை மட்டும் காயப்படுத்தவில்லை எனவும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஹிந்தியை விரும்பும் அனைவரின் மனதையும் காயப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.