இந்தியா

கல்கி விஜயகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

webteam

வருமானவரித்துறை சோதனையின் எதிரொலியாக கல்கி விஜயகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. தொடர் சோதனையில், 44 கோடி ரூபாய் பணம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, 90 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெளிநாட்டுகளில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்திவந்த நிலையில், கல்கி விஜயகுமார் மற்றும் அவரின் மகன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

அந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் கல்கி ஆசிரம கணக்காளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.