பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மெளனம் காக்கக் கூடாது என விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீதான வழக்கு, லக்னோ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கர்நாடகாவில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது ஏன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் கௌரி லங்கேஷ் படுகொலையை கொண்டாடுகிறார்கள். மோடி இதைக் கண்டும் காணாமல் இருக்கிறார். அப்படியானால் இதை அவர் ஆதரிக்கிறாரா? அவரது மெளனம் வேதனை தருகிறது. மோடி தன்னை விட பெரிய நடிகராக இருக்கிறார் என்றும் பிரகாஷ் ராஜ் சாடியிருந்தார்.
இதனையடுத்து பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.