இந்தியா

பசுவை காப்பாற்ற முயன்று சாலையில் கவிழ்ந்த மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம்

பசுவை காப்பாற்ற முயன்று சாலையில் கவிழ்ந்த மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம்

rajakannan

சாலையில் நின்று கொண்டிருந்த பசு மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மோகன் பகவத்திற்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு உள்ளது. பாதுகாப்பு படை வீரர்களின் வாகனம் எப்பொழுதும் அவருடன் இருக்கும். இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரபூரில் இருந்து நாக்பூரை நோக்கி மோகன் பகவத் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே ஒரு பசு நின்று கொண்டிருந்தது. 

பசு மீது மோதாமல் இருப்பதற்காக மோகன் பகவத் பாதுகாப்பு வாகனத்தின் டிரைவர் பிரேக்கை அழுத்தி மிதித்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கார் தலைகீழாக கவிந்தது. நேற்று மாலை 5.15 மணியளவில் வரோரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

மோகன் பகவத் வாகனம் முன்னாள் சென்றுவிட்ட நிலையில், பின்னால் வந்த வாகனம்தான் விபத்தை சந்தித்தது.