இந்தியா

”மலேசிய மணல் சரிப்படாது” - தமிழக அரசு

”மலேசிய மணல் சரிப்படாது” - தமிழக அரசு

webteam

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் கட்டுமானத்துக்கு சரிப்படாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை விடுவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மணலை வாங்கிக் கொள்ள தமிழக அரசு தயாரா என் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.சாதாரணமாக கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் மணலில் 65% முதல் 75 சதவீதம் வரை மட்டுமே சிலிக்கான் இருக்க வேண்டும். ஆனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலில் 85% சிலிக்கான் உள்ளது. அதனை வாங்கி நாங்கள் என்ன செய்வது என தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது. 

இதனை கேட்ட உச்சநீதிமன்றம் , மணலின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது