இந்தியா

'பாஜக மூத்த தலைவர்கள் என்னிடம் ஆட்சி கலைப்போம் என்றனர்' - சஞ்சய் ராவத்

'பாஜக மூத்த தலைவர்கள் என்னிடம் ஆட்சி கலைப்போம் என்றனர்' - சஞ்சய் ராவத்

கலிலுல்லா

விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களை பாஜக அரசு விசாரணை என்ற பெயரில் குறிவைப்பதாகவும், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், ''அன்று என்னுடைய நெருங்கிய நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. உடனே அன்று இரவே நான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு, 'நான் உங்களை மதிக்கிறேன். நீங்கள் மிகப்பெரிய தலைவர். நாட்டின் உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால், இப்போ நடப்பது எதுவும் சரியல்ல. உங்களுக்கு என்னிடம் பகைமை இருந்தால், என்னை டார்கெட் செய்யுங்கள். சித்ரவதை கூட செய்யுங்கள். ஆனால், ஏன் உங்களுடைய விசாரணை அமைப்புகள் என் நண்பர்களையும், உறவினர்களையும் டார்கெட் செய்கிறது?' எனக் கேட்டேன்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள் என்னை சந்தித்தனர். கட்சி தாவுமாறு கூறினர். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். இந்த அரசை எப்படியும் நாங்கள் கவிழ்க்க விரும்புகிறோம். விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம். அப்படியில்லாவிட்டால், எம்எல்ஏக்களை கட்சி தாவச் செய்து ஆட்சி அமைப்போம் என்றனர் '' என்றார்.