இந்தியா

மேற்கு வங்க தேர்தல் வன்முறை வழக்குகள் - சிபிஐக்கு மாற்றம்

PT WEB

மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட அனைத்தையும் சிபிஐ விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 294 இடங்கள் கொண்ட மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளை தனிப்பெரும்பான்மையுடன் பிடித்து மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக 77 இடங்களைப் பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பாஜகவினரும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டதாக கூறி வழக்குகள் பதிவு செய்யபட்டன.

 இது தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களது கண்காணிப்பில் விசாணை நடைபெறும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.