இந்தியா

ரஃபேல் ஒப்பந்தம்: சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்?

ரஃபேல் ஒப்பந்தம்: சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்?

webteam

தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம், பெரும் அரசியல் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக இந்த விஷயத்தில் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில், நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவுக்கு வரவுள்ளது. 

ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முந்தைய கடைசி கூட்டத் தொடர் முடிவுக்கு வரயிருக்கிறது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று அரசு தாக்கல் செய்யவுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன என நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்று  ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை தாக்கல் செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இன்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான அமளி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.