இந்தியா

இனி ஓடவும், ஒளியவும் முடியாது ! - வங்கி மோசடிகளை தடுக்க புதியச் சட்டம்

இனி ஓடவும், ஒளியவும் முடியாது ! - வங்கி மோசடிகளை தடுக்க புதியச் சட்டம்

வங்கி மோசடிகளைத் தடுப்பதற்கான ஆணையத்தை அமைக்கும் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் இதில் வங்கி மோசடி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தப் புதிய சட்டத்திற்கு பொருளாதார குற்றவாளிகள் மசோதா (Fugitive Economic Offenders Bill 2018) என பெயரிடப்பட்டுள்ளது. அதில் தலைமறைவாகும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடைய பினாமிகளின் உள்நாட்டு, வெளிநாட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யும் வகையில் இயற்றப்பட இருக்கிறது. மேலும், வங்கி மோசடி புகார்களை விசாரிக்கும் ஆணையம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “புதிய சட்ட மசோதா வங்கி மோசடி செய்பவர்களை ‘நிதி
மோசடியாளர்’ என்று நீதிமன்றம் அறிவிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு அறிவிக்கப்பட்டவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கவும் மசோதாவில் இடம் அளிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆன தொழிலதிபர் விஜய் மல்லய்யா, பஞ்ஜாப் நேஷ்னல் வங்கி மோசடி புகழ் வைர வியாபாரி நீரவ் மோடி ஆகியோர் செய்த மோசடிக்கு பின், இத்தகைய புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.