இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் - பெண்கள், சிறுவர்கள் மீது வழக்கு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் - பெண்கள், சிறுவர்கள் மீது வழக்கு

webteam

மதுரையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சிறுவர் - சிறுமிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மதுரை கோரிப்பாளையத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 20 சிறுவர், சிறுமிகள், 170 பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்து 384 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.