இந்தியா

அமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்

அமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்

rajakannan

குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

குஜராத், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், குஜராத், ஒடிசாவில் இரண்டு இடங்களும், பீகாரில் ஒரு இடமும் அடங்கும். இந்த ஆறு இடங்களில் 4 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் காலியாகியுள்ளது.

அதில், பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி ரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அடங்குவர். ஜூலை 5 ஆம் தேதி இந்த 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். ஜூலை 9 ஆம் தேதி அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.